சீனாவில் கரோனா பரவலின் போது சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்நாடு முழுவதும் பிரம்மாண்ட எல்.இ.டி திரைகளில் அவர்களது புகைப்படங்கள் ஒளிரவிடப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. சீனாவில் இந்த வைரசின் தாக்கம் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களைச் சீனா கௌரவித்துள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த பணியாற்றிய அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், சீனா முழுக்க 18 நகரங்களில் 50,000 எல்.இ.டி திரைகள் நிறுவப்பட்டு, அதில் அவர்களது புகைப்படங்களுடன் நன்றி தெரிவிக்கப்படுகிறது. சீனா முழுவதிலுமிருந்து 132 மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.