கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்தநிலையில், ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அந்த பிராந்தியத்தில் மேலும் பதட்டம் அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில், ஈரான் தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
VIDEO: Iran TV footage reportedly shows rockets launched at airbase housing US troops in Iraq pic.twitter.com/9TaN5zs0Tr
— AFP news agency (@AFP) January 8, 2020