Skip to main content

விமானத்தின் கருப்பு பெட்டியை தர மாட்டோம் - முரண்டு பிடிக்கும் ஈரான்!

Published on 09/01/2020 | Edited on 10/01/2020

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த விமானம் சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியதால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக தற்போது அமெரிக்கா சந்தேகம் எழுப்பியுள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலால் விமானம் நொறுங்கி இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகம் அடைந்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் தற்போது தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டியை நாங்களே ஆய்வு செய்ய இருக்கிறோம். இதற்காக விமான தயாரிப்பு நிறுவனத்தையோ அல்லது அமெரிக்க அரசின் உதவியையோ நாங்கள் நாட போவதில்லை என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தே விபத்து ஏற்பட காரணம் என்று ஈரான் அறிசு தெரிவித்துள்ளது. கருப்பு பெட்டியை தரமாட்டோம் என்ற ஈரானின் அறிவிப்பு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்