
சென்னை தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சேர்ந்தவர் 24 வயதான சகாயமேரி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றியில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே சகாயமேரியும், அஷ்வின் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அஷ்வினுக்கும் - சகாயமேரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஷ்வின் சகாயமேரியும் பேசாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக சகாயமேரி மன வேதனையில் இருந்திருக்கிறாராம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறைக்குச் சென்ற சகாயமேரி, நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, அறையில் சகாயமேரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சகாயமேரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சகாயமேரியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.