Skip to main content

இளம் பெண்ணுக்கு மிரட்டல்... நகை, பணம் பறிப்பு!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Young woman intimidating jewelry money nellai

 

நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் ஏரியாவைச் சேர்ந்த சாலமோன் (24). ப்ளஸ் 2 வரை படித்த இந்த வாலிபரின் சகாக்கள் மனோசேட், ஜான்சன். அனைவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாலமோன் அதே தெருவிலிருக்கும் கல்லூரிப் படிப்பை முடித்த ஒரு இளம் பெண்ணோடு நெருங்கிப் பழகி, பின் காதலாகியிருக்கிறது.

 

நாளடைவில் இவர்களின் தொடர்பு வீடியோ காலில் தொடர்ந்து பேசுமளவுக்கு முற்றியிருக்கிறது. அவ்வாறு பேசும்போது சாலமோன் அந்தப் பெண்ணை வீடியோ காலில், ஆபாசமாகப் படம் பிடித்துப் பதிவு செய்து, தனது ஆடம்பரச் செலவிற்காகப் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.

 

tt

இதனிடையே இந்த விவகாரத்தையறிந்த பெண்ணின் பெற்றோர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். இதனால் ஆத்திரமான சாலமோன், செல்ஃபோனில் அந்தப் பெண்ணிடம் நகை, பணம் கேட்டதுமில்லாமல் தனது நண்பர்களுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவரின் பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்புவேன் என மிரட்டவே, அந்தப் பெண் பதறி மறுத்திருக்கிறார்.

 

பின்பு, தனியே இருந்த அப்பெண்ணை அணுகிய சாலமோன், அப்பெண்ணின் வீடியோவை அவளின் கணவருக்கு அனுப்பிவிடுவதாக மிரட்ட, அந்தப் பெண் பயந்துபோயிருக்கிறார். அதனைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணிடமிருந்து லட்சத்திற்கும் மேலான மதிப்புள்ள தங்க நெக்லஸ் மற்றும் மோதிரத்தைப் பறித்துச் சென்றிருக்கிறார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய சாலமோன், கொலை மிரட்டலும் விடுக்க, மிரண்டு போன அந்தப் பெண் தனது பெற்றோர்களிடம் சம்பவங்களைச் சொல்லி கதறியிருக்கிறார்.

 

இதையறிந்த, சாலமோன் பழிவாங்கும் நோக்கில், அப்பெண்ணின் வீடியோவை அவளது கணவரின் செல்ஃபோனுக்கு அனுப்ப, எதையும் விசாரிக்காமல் கணவரின் வீட்டார், பெண்ணின் வீட்டில் கொண்டுவந்து விட்டுப் போய்விட்டனர்.

 

cnc

 

வேறு வழியில்லாமல், பெண்ணும் பெற்றோர்களும் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க, அவர்களோ அதனைப் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப்பிடம் புகார் அளித்தனர். ஏ.எஸ்.பி.யின் உத்தரவுப்படி அந்த வழக்கு முக்கூடல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார், சாலமோன் அவனது சகாக்களான மனோசேட், ஜான்சன் ஆகிய மூவர் மீதும், 'கொலை மிரட்டல்', 'ஆபாச படமெடுத்து பாலியல் ரீதியாக மிரட்டுதல்' உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

Mumbai team wins IPL trophy for the 5th time!

 

தற்போது இந்த பாலியல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஜான்சன் ஏற்கனவே அதேபகுதியை சேர்ந்த 2 இளம் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களையும் தங்களது காதல் வலையில் சிக்கவைத்து ஆபாச படம் எடுத்து பணம் பறித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் ஜான்சன் கடந்த 02ம் தேதி கைது செய்யப்பட்டு நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். தற்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாலமோன், மனோசேட், ஜான்சன் மூன்று பேருக்கும் கஞ்சா புகைக்கும் பழக்கமும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நெல்லையில் ஸ்கோர் செய்த பா.ஜ.க; கொந்தளிக்கும் திமுகவினர்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
DMK leadership angry as BJP vote count increased in Nellai

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின் போது திருநெல்வேலி மக்களவைக்குப் போட்டியிட்ட தி.மு.க.வின் கூட்டணி சார்பில் நின்ற தி.மு.க.வின் ஞானதிரவியம் 5,22,623 வாக்குகள் பெற்று எம்.பி.யானார். அவரை எதிர்த்து பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.வின் மனோஜ் பாண்டியன் 3,37,166 வாக்குகள் பெற்றார்.

தற்போதைய திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகள் (கடந்த தேர்தலை விட 20,327 வாக்குகள் குறைவாக) பெற்று வெற்றி கண்டார். அவரோடு தனியாக மல்லுக்கு நின்ற பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் கிட்டத்தட்ட மலைக்க வைக்கிற அளவுக்கு கிராசிங்காக 3,36,676 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இது தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றவாக்குகளின் கணக்கு பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், தமிழகம் முழுக்க 39+1 - 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 100க்கு 100 என்று 40 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாக அள்ளினாலும், நெல்லையில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன், கூட்டணி பலமின்றி ஒற்றை நபராகக் களத்தில் இத்தனை (336676) அளவுக்கு க்ராசிங்காக வந்ததை திகைப்புடன் பார்க்கிறதாம்.

DMK leadership angry as BJP vote count increased in Nellai

தமிழகத்தின் பிற தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட்டு வாக்குகளைப் பெற்றாலும் குறிப்பாக திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் இந்த அளவுக்கு ரீச்சானதின் பின்னணியை ஏற்கனவே தி.மு.க. தலைமை சந்தேகக் கண்களோடு தான் ஆரம்பம் முதலே கண்காணித்து வந்தது. இதன் பின்னணியில் உள்ளடி இருப்பதை மேலோட்டமாக உறுதிபடுத்திய தி.மு.க.வின் தலைமை, தேர்தல் ஆரம்ப காலகட்டங்களில் நடந்தவைகளையும், கட்சியின் குறிப்பிட்ட தரப்பினரின் தேர்தல் பணிகளில் ஏற்பட்ட தொய்வுகள் பற்றி நெல்லை மாநகர மாவட்ட கட்சியினர் தலைமைக்கு அனுப்பிய புகார்கள் என்று இரண்டையும் ஒப்பீடாக எடுத்துக் கொண்டு விசாரணைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதால் நெல்லை மாநகர தி.மு.க அளவில் தலைமையின் நடவடிக்கை பாயலாம் என்ற கலக்கமிருப்பதைச் சுட்டிக்காட்டுகிற தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களே, இனி வரும் காலத்தில் அது உள்ளடிகளில்லாத தேர்தல் பணிகளுக்கு உத்தரவாதமாகும் என்பவர்களே திருநெல்வேலி எம்.பி. தேர்தலில் தி.மு.க.வில் நடந்த உள்குத்துகளைப் பற்றி விவரித்தார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நேரத்தில் நெல்லையில் பா.ஜ.க. தனித்து போட்டியிட வாய்ப்பில்லை. ஏனெனில் அது ஒற்றையாக களம் காண்கிற அளவுக்கு தொகுதியில் பேஸ்மெண்ட் கிடையாது என்று பரவலாகப் பேசப்பட்டது. இதற்கிடையே நான் தான் பா.ஜ.க.வின் திருநெல்வேலி வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டதுமில்லாமல் ஸ்ட்ரெயிட்டாக தேர்தல் பிரச்சாரத்திலிறங்கியதை பிற கட்சிகள் வியப்புடன் பார்த்தன. பா.ஜ.க.விற்கான தகுதியான வேட்பாளர்கள் சிக்காமல் போனதால் வேறு வழியின்றி பா.ஜ.க. நயினார் நாகேந்திரனை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிலை.

DMK leadership angry as BJP vote count increased in Nellai

தேர்தலில் ஜெயித்தால் மத்திய அமைச்சராகி விடலாம் என்ற திட்டத்தில் அதற்கான மூவ்களை மேற்கொண்ட நயினார் கரன்சியை தாமிரபரணியாய் தொகுதியில் ஓடவிட்டவர், தனக்கான இமேஜை அதிகரித்துக் கொள்ள நெல்லை எம்.பி. தொகுதிக்குட்பட்ட நெல்லை அம்பை என்று இரண்டு தொகுதிகளிலும் அடுத்தடுத்து பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்தையும் நடத்தி பிரம்மாண்டப் படுத்தியிருக்கிறார். மேலும் தனக்கான வாக்குபலத்தை அதிகரித்துக் கொள்ள தொகுதியில் தான் சார்ந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைத்தால் மேக்சிமம் ரீச் ஆகிவிடலாம், பிற சமூக மக்களையும் தன் பக்கம் திருப்பினால் வெற்றிக் கோடு அருகில் என்ற ப்ளானில் அம்பை தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவின் துணையுடன் ஸ்வீட் பாக்ஸ்களை தேவையான அளவிற்கு ஏரியா சார்ந்த முக்கிய புள்ளிகளின் துணையோடு இறக்கியவர் ஓட்டுக்கு முன்னூறு என்ற லெவலிலும் கவனிப்பு.

இதனால் அ.தி.மு.க. அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் பண்ணையார் சார்ந்த பிரிவு சார்ந்தவர்களின் மறைமுகமான ஆதரவும் கிடைத்திருக்கிறது. இந்த திரை மறைவு காய் நகர்த்தலில் நெல்லை தி.மு.க. புள்ளிகளும் அடங்கியது பற்றிய தகவல்களுடன் நெல்லை ஜங்ஷன் பகுதியின் தி.மு.க. நிர்வாகியான கடவுள் பெயரைக் கொண்ட அவர், பண்ணையாருக்காக பகிரங்கமாக வேலை பார்த்தது பொறுப்பு அமைச்சருக்குத் (தங்கம் தென்னரசு) தெரிந்தும் கூட அவர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை போன்ற தொகுதியில் நடக்கிற அனைத்தும் புகாராகக் கட்சித் தலைமைக்குப் போயிருக்கிறது. அத்துடன் நெல்லை தொகுதியில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்ற பிம்பம் உருவானது. இதையடுத்தே அலர்ட் ஆன தி.மு.க.வின் தலைமை, நெல்லை தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணியான காங்கிரஸ் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தொகுதி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. இறுதிக் கால கட்டமான வாக்குப் பதிவு நாளின் போது கூட பாளை, அதற்குட்பட்ட மேலப்பாளையம் பகுதிகளின் வாக்குச் சாவடிகளில் காலை முதலே தி.மு.க.வின் பொறுப்பாளர்களின் தலை காணாமல் போனதை வாய்ப்பாக்கிக் கொண்ட பண்ணையார் தரப்பினர் ஓட்டுக்கான பட்டுவாடாவை தடையின்றி சரசரவென முடித்திருக்கின்றனர்.

DMK leadership angry as BJP vote count increased in Nellai

இதனால் நெல்லையில் பா.ஜ.க. கரையேறும் என்ற பேச்சுக்கள் கனமாக அடிபட்டது. எதிர்பார்ப்புகள் பல்சை எகிற வைத்தன. தி.மு.க.வின் தலைமையைக் கூட யோசிக்கவைத்தது. இப்படியான பா.ஜ.க. பண்ணையாரின் ஜெகஜ்ஜால வித்தை காரணமாகவே திருநெல்வேலி தொகுதி யாருக்கு என்ற தவிப்பிற்கிடையே அம்பையின் ஒரு பகுதி, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட தொகுதிகள் முழு அளவில் கை கொடுக்க தி.மு.க.வின் கூட்டணியான காங்கிரசின் ராபர்ட்புரூஸ் 5,02,296 வாக்குகள் வெற்றிபெற்றிருக்கிறார். 3,36,676 என எதிர்பார்க்காத அளவுக்கு வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரனோ, நெல்லை சட்டமன்ற தொகுதியில் எங்களுக்கு சற்று கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ள போதிலும் பாளை சட்டமன்ற தொகுதியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளன என்று தெம்பாகவே சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

இப்படி தவிப்பிற்கிடையே நெல்லை பாராளுமன்றத்தை தி.மு.க. கூட்டணி கைப்பற்றினாலும் இதே தவிப்பும், படபடப்பும் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரக் கூடாது. அதற்குள்ளாக தலைமை, மாநகர கட்சியில் கழித்தல் கூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார்படுத்த வேண்டும், என வேதனையும் கொதிப்புமாய் வெளிப்படுத்துகிறார்கள் தி.மு.க.வினர்.

Next Story

ஏழுமணிநேர இறுதி ஊர்வலம்; ஸ்தம்பித்த நெல்லை!(படங்கள்)

Published on 29/05/2024 | Edited on 29/05/2024

 

நெல்லை மாவட்டத்தின் மூன்றடைப்பு பகுதியிலுள்ளது வாகைகுளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜன். அவர் மீது பல்வேறு வழக்குகளிருப்பதால் அந்தப் பகுதியின் காவல் நிலையத்தின் சரித்திர பதிவேட்டில் ரவுடி என்று இடம் பெற்றவர். கடந்த 20ஆம் தேதியன்று தீபக்ராஜன் தன் காதலி மற்றும் நண்பர்களுடன் நெல்லை கே.டி.சி. நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவரை சுற்றி வளைத்த கூலிப்படையினர் விரட்டி விரட்டி வெட்டிக் கொன்றனர். இதனால் நெல்லை சுற்று வட்டாரங்களில் பதற்றமும் பற்றிக் கொண்டது.

கொலைச் சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் ஐயப்பன், வல்லநாடு தம்பான் முத்து சரவணன் உள்ளிட்ட சிலரைப் போலீசார் கைது செய்தனர். ஆனாலும் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாதவரை உடலை வாங்கப் போவதில்லை என உறவினர்களும் ஊர்மக்களும் தெரிவித்துவிட ஏழு நாட்களாக உடல் வாங்கப்படாத நிலையில் போராட்டம் நீடித்தது. கிராமப் புறங்களிலோ பீதியும் தணியாமலிருந்தது.

தீவிர விசாரணையில் நவீன் தலைமையிலான கூலிப்படையினர்தான் சம்பவத்தில் ஈடுபட்டது எனத் தெரிய வந்திருக்கிறது. இதில் முக்கிய குற்றவாளிகளான நவீன், லெப்ட் முருகன், லட்சுமி காந்தன் சரவணன் உள்ளிட்ட நான்கு பேரும் திருச்சி போலீசாரால் வளைக்கப்பட்டு நெல்லை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனிடையே முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைக்குப் பின்னர் 27 அன்று தீபக் ராஜனின் உடல் காலை 10.30 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலைப் பெறுவதற்கு நண்பர்கள், உறவினர்கள், சமுதாயத்தினர் திரண்டு வந்திருந்தனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் ஆதர்ஷ் பச்சோரா உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலம் புறப்பட்டது. கன்னியாகுமரி தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் பாளையிலிருந்து அவரது சொந்த ஊரான வாகைகுளம் 21 கி.மீ தொலைவு. அத்தனை தொலைவு உடல் உறவினர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகளில் உடல் சென்ற வாகனத்தின் முன்னும் பின்னும் அணி வகுத்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கூட்டம் சென்றதால் இருபுறமும் செல்கிற வாகனங்கள் தடைபட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பல மணி நேரம் நீடிக்க தாமதமாவதை உணர்ந்த எஸ்.பி. சிலம்பரசன் உடல் செல்கிற ஆம்புலன்சின் டிரைவரை மாற்றிவிட்டு போலீஸ் டிரைவரை அமர்த்தியவர் சற்று வேகமாக இயக்கச் சொல்ல அவருடன் இளைஞர்கள் சிலர் கடும் வாக்குவாதம் செய்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஏழு மணி நேர ஊர்வலத்திற்கு பின் மாலை 5.30 மணியளவில் அவரது கிராமத்தை வந்தடைந்ததையடுத்து தீபக்ராஜனின் உடல் பிடல்காஸ்ட்ரோ, சேகுவேரா உள்ளிட்ட சில நாடுகளின் புரட்சியாளர்களின் வரலாற்றுப் புத்தகங்கள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் படுகொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை திருச்சி போலீசார் வளைக்கும் போது அவர்கள் பிடியிலிருந்த நவீன், லெப்ட் முருகன் இருவரும் தப்பி ஒரு பெரிய சுவரைத் தாண்டிக் குதித்து ஓடினர். அதில் நவீனுக்கு வலது கையிலும், லெப்ட் முருகனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்குப் பின் அவர்களுக்கு மாவு கட்டுப் போடப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த மாவுகட்டு சம்பவம் ஒரு சாராரிடையே அதிருப்தியைக் கிளப்பியுள்ளதாம்.