Published on 07/08/2018 | Edited on 07/08/2018
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் இன்று மாலை 6.10க்கு காலமானதாக காவேரி மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பல்வேறு தலைவர்களும் பிரமுகர்களும் தங்கள் அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் முன்னாள் திமுக உறுப்பினருமான குஷ்பூ, தான் கலைஞரை சந்தித்த கடைசி சந்திப்பை நினைவு கூர்ந்து அந்தப் புகைப்படத்தை பதிவிட்டு, "இதுதான் நான் அவரை சந்தித்த கடைசி முறை. அதுவே கடைசி முறையாகும் என்று நான் நினைக்கவில்லை. மிஸ் யூ அப்பா" என்று குறிப்பிட்டு தன் ட்விட்டரில் கண்ணீர் அஞ்சலியை செலுத்தியுள்ளார்.