Skip to main content

திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் மர்ம மரணம்! 

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

woman passed away after marriage

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள அன்னியூர் ஊரைச் சேர்ந்தவர் பழனிவேல் என்பவரின் மகள் பிரதீபா(22). இவர், அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்(24) என்பவரை காதலித்து ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதி நேற்று முன்தினம் அவர்களது குடும்ப நண்பர்களுடன் சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். அப்போது, விழுப்புரம் - திருவாமாத்தூர் நெடுஞ்சாலை அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். பின் வீட்டிற்கு சென்ற பிரதீபா, இரவு 11 மணி அளவில் வாந்தி எடுத்துள்ளார். உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு பிரதீபாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரதிபாவின் தந்தை பழனிவேல், தமது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இளம் பெண்ணின் மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், விசாரணையில் இளம் பெண் சம்பவத்தன்று இரவு, நெடுஞ்சாலை ஓர ஓட்டலில் உணவு சாப்பிட்டதால், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அன்பு, கதிரவன், பத்மநாபன், பழனி, மற்றும் சுகாதாரத்துறை கோலியனூர் வட்டார மேற்பார்வையாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் நேற்று அந்த ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும், அவர் சாப்பிட்ட உணவு பொருளின் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்