
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் விவசாய அமைப்புகள், விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்திலும், காவிரி மேலாண்மை கூட்டத்திலும் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், முதலில் 12,000 கன அடி திறக்க சொன்னீர்கள் இப்பொழுது 5,000 கன அடி நீர் திறந்துவிட சொல்கிறார்கள். ஏன் இப்படி குறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. காவிரி ஆணையமும், ஒழுங்காற்று குழுவும் 5,000 கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. காவிரி ஒழுங்காற்று குழு முறையாக நடக்கிறதா அல்லது கர்நாடகாவிற்கு அனுசரணையாக நடக்கிறதா? என்று மத்திய அமைச்சரிடம் கேட்டேன்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை 5,000 கன அடியிலிருந்து மேலும் குறைக்கப்பட்டு நாளை மறுநாள் முதல் 3000 கன அடியாக திறந்து விட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)