திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளை கடத்த முயன்றதாக பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் சேமங்கலத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் அவர் உடல் நிலை குறைப்பாட்டினால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார், அவரது மகள் மகள் மகாலெட்சுமி உடன் இருந்து கவனித்து வந்தார். அங்கு சிகிச்சைக்காக அமுதா என்பவரும் அடிக்கடி வந்து போக மகாலெட்சுமிக்கும், அமுதாவிற்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தாத்தாவை பார்ப்பதற்காக மகாலெட்சுமியின் மகன்கள் ராகுலும் ராஜேஷிம் வந்தனர். அவர்களை அமுதாவிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு டீக்கடைக்கு சென்றிருக்கிறார் மகாலெட்சுமி.
பிறகு வந்து பார்த்ததும், அமுதாவையும், குழந்தைகளையும், காணவில்லை. அங்கும் இங்கும் தேடிக் கொண்டு ஓடியுருக்கிரார் மகாலட்சுமி, மருத்துவமனைக்கு வெளியே கூட்டத்தில் குழந்தைகள் இருவரும் நின்றனர். அமுதாவை காவலர்கள் விசாரித்தனர்.
அங்கு பதறியடித்து ஓடிவந்த மாசுலெட்சுமியை குழந்தைகள் ஓடி வந்து கட்டியனைத்துக் கொண்டனர்.
" அமுதா இரண்டு குழந்தைகளையும் பதட்டத்துடன் இழுத்துக் கொண்டு போனார். குழந்தைகள் அழுதுபுரண்டனர். நாங்கள் அனைவரும் சுற்றி வளைத்து விசாரித்தோம். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதோடு குழந்தைகளை விட்டு விட்டு ஓடினார். பிறகு காக்கிகளிடம் கூறினோம், அவர்கள் அமுதாவை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்." என்றனர் அங்கு இருந்தவர்கள்.