Published on 24/09/2019 | Edited on 24/09/2019
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெடிமருந்து கிடங்குகள் செயல்படுவதை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.

அப்பொழுது வெடி பொருள் விற்பனை இடங்கள் மற்றும் உற்பத்திக் மையங்களை ஆய்வு செய்த எஸ்பி ஜெயகுமார் அவர்கள் காவல்துறையின் அனுமதி பெறாமல் வெடிபொருட்களை யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என வெடி பொருள் கிடங்கு உரிமையாளர்களிடம் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. எச்சரித்தார்.