Skip to main content

நோட்டாவிற்கு ஓட்டு போடுவோம் – தெறிக்கவிடும் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் !

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

தேர்தல் ஜெயிக்க வேண்டும் என்கிற பரபரப்பில் வாக்கு சேகரிக்க ஆட்களை தயார்படுத்துவதற்கு வேட்பாளர்கள் பயங்கர பிஸியாக இருக்கிறார்கள். பணத்தை தண்ணீராக இறைத்துக்கொண்டுயிருக்கிறார்கள் என்பது அங்காங்கே பிடிபடும் பணத்தினை வைத்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் கூட்டணியில் இருக்கும் ஆட்களை சேர்த்து பணியாற்றுவது என்பது மிகவும் சிரமான நிலையில் இருக்கிறது. 

 

 Vote for Nota - District Congress Vice President

 

இந்த நேரத்தில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் பைந்தமிழ் செல்வன் பத்திரிகையாளர்களிடம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் மட்டும் 10 ஆயிரம் ஓட்டுகள் காங்கிரசிற்கு உள்ளது. எங்கள் பகுதிக்கு இதுவரை பாரிவேந்தர் தரப்பில் யாரும் எதுவுமே பார்க்க வரவில்லை. எங்கள் கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர் கலை திருநாவுக்கரசர் கோஷ்டி, நான் இளங்கோவன் கோஷ்டி என்பதால் அவர் இந்த பகுதியை கண்டு கொள்ளவே இல்லை. நான் 40 வருடமாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். தொண்டர்களை ஒதுக்குவது. கட்சியினர் இடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

இதுகுறித்து ஐஜேகே மாவட்ட செயலாளர் செல்வகுமாரிடம் இது குறித்து பேசினேன். அதற்கு அவர் உங்கள் மாவட்ட செயலாளர் கலையிடம் தேவையான தொகை கொடுத்து விட்டோம் நீங்கள் அவரை போய் பாருங்கள் என்று சொன்னார். அவர் திருநாவுக்கரசர் கோஷ்டி அதானல் எங்கள் தொண்டர்களை கண்டு கொள்ளமாட்டார். அவர் அந்த பகுதியில் கட்சியின் பூத் கமிட்டி கூட அமைக்க வில்லை என்று சொன்னேன். உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் வாங்கி கொள்ளுங்கள் என்றார். ஆனால் நான் எனக்கு எதுவும் வேண்டாம் நீங்கள் அந்த பகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை போய் சந்தியுங்கள் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் நான் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. இது குறித்து எங்கள் பகுதியில் உள்ள முன்னாள் காங்கிர நகர தலைவர் தண்டாயுதபாணி அவர்கள் காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரியிடம் பேசினோம். ஆனால் அவரோ உங்கள் மாவட்ட பிரச்சினையை உங்களுக்குள் முடித்து கொள்ளுங்கள், என்னிடம் வராதீர்கள் சொல்லி எங்களை துண்டித்து விட்டார். 

 

 

ஆதலால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 35 பஞ்சாயத்தில் 25 பூத் கமிட்டியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் நோட்டாவிற்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து வரும் 7ஆம் தேதி சமயபுரத்த்தில் நடக்கும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளோம் என்றார். அதிரடியை கிளப்பியுள்ளார். 

 

காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பிரச்சனை நோட்டாவிற்கு ஓட்டு போடுவோம் என்று சொல்கிற அளவிற்கு மாற்றியிருக்கிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்