Skip to main content

செயற்கை மணல் கொள்ளையர்கள் - காப்பாற்றும் அதிமுக அமைச்சர்

Published on 24/02/2019 | Edited on 24/02/2019

 

பாலாற்றை சுரண்டி ஒருப்பக்கம் மணல் கொள்ளை நடத்துகிறார்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிமுகவினர். இதனை தடுக்க வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை, கணிமவளத்துறை கண்டும் காணாமல் கண் மூடிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் பாலாற்றில் உள்ள குவாரிகள் மூடப்பட்டதால் ஆற்றின் ஓரம் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஆழமாக தோண்டி மணலை எடுத்து அதை நீர்விட்டு கழுவி மணலாக்கி விற்பனை செய்கின்றனர். இதுப்பற்றி புகார் தந்தாலும் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

v

 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் காக்கங்கரை என்கிற கிராம பகுதியில் செயற்கை மணல் உற்பத்தி நிலையங்கள் சட்டவிதிகளுக்கு முறையாக பலவும் செயல்படுகின்றன. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதுப்பற்றி அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார் தந்தும் சில சமயம் நடவடிக்கை எடுப்பது, பல சமயம் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றனர். அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருக்க நன்றாக கவனித்துவிடுகின்றனர்.

 

v

 

இந்நிலையில் பிப்ரவரி 23ந்தேதி காலை கந்திலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் செயற்கை மணல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு போலீசார், 5 மணல் லாரி டிப்பர்கள் மற்றும் அதன் ஓட்டுநர்களை மணலுடன் பிடித்து கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யச்சொல்லினர். அவர்களும் சரியென கூறியுள்ளனர். மதியம் 1 மணியளவில் ஓட்டுநர்கள் 5 பேரையும் காவல்நிலையத்தை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர் கந்திலி போலிஸார். டிப்பர் லாரிகள் மட்டும் கிக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

v

இதைக்கேட்டு அதிர்ச்சியான சமூக ஆர்வலர்கள் நம்மிடம், மணல் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக திருப்பத்தூர் தொகுதி முன்னால் எம்.எல்.ஏ ரமேஷ் ஆதரவாக உள்ளார். 5 டிப்பர் லாரிகள் மற்றும் டிரைவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் உடனடியாக அவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் வீரமணியிடம் இதுப்பற்றி கூறியுள்ளார். அவர் உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு சத்தம் போட இதனால் 5 ஓட்டுநர்களை விடுவித்தவர்கள், 3 டிப்பர் லாரிகளையும் விடுவித்துள்ளனர். இரண்டு டிப்பர் தான் சிக்கியுள்ளதாக தற்போது தகவல் தெரிவிக்கின்றனர் என்கின்றனர். டிப்பர் லாரிகள் காவல்நிலையத்துக்கு வந்தது, கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ போன்றவை இருக்கும்போதே போலிஸார், அதிகாரத்தில் உள்ளவர்களின் பேச்சை கேட்டு விடுவிக்கின்றனர் என அதிருப்தி தெரிவித்தனர். 


 

சார்ந்த செய்திகள்