Published on 18/09/2024 | Edited on 19/09/2024
தமிழ்நாடு வஃக் போர்டின் புதிய சேர்மனாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
நவாஸ்கனி, ராமநாதபுரம் எம்.பி.யாக இருக்கிறார். தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய தலைவராக திமுகவை சேர்ந்த ஒரு முஸ்லீம் பிரமுகருக்கு தர வேண்டும் திமுக தலைமையிடம் காய்கள் நகர்த்தப்பட்டிருந்தன. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார். இறுதியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு தர இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி நவாஸ்கனி சரியான நபர் என முதல்வர் முடிவு செய்தார் என்று சொல்லப்படுகிறது.