
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் செங்குந்த நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய பைக்கை கடந்த 8ஆம் தேதி இரவு திருடிச் சென்றனர். இதேபோல் சின்னசேலம் செங்குந்தர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன், வரதப்பனூரை சேர்ந்த ஏழுமலை, குரால் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோரது இரண்டு சக்கர வாகனங்களும் திருடப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராமநாதன் மேற்பார்வையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியதாஸ், பாலமுரளி, முருகன் மற்றும் காவல்துறை சேர்ந்த மனோகரன் தங்கதுரை உள்ளிட்ட தனிப்படை போலீசார் வாகனங்களை தீவிரமாக தேடிவந்தனர்.
நேற்று காலை இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் கனியாமூர் கைகாட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த பைக்கில் வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதையடுத்து. தனிப்படை போலீசார் அவரை தனிமையில் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அப்போது அவர் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பதை சின்னசேலம் பகுதியில் சுமார் இரண்டே கால் லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் காவல் நிலைய பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள இரண்டு பக்கங்களையும் உளுந்தூர்பேட்டை பகுதியில் ஒரு பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சுமார் 3 லட்சம் மதிப்புள்ள 7 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.