Published on 16/08/2018 | Edited on 16/08/2018
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல்கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி கிளம்பியுள்ளார்.