உடுமலைப்பேட்டை கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் பாட்டி கோதையம்மாள் கஞ்சா விற்ற வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பழனி அருகே குப்பம்பாளையத்தில் கோதையம்மாள்(கௌசல்யாவின் பாட்டி), வெகுகாலமாக அந்த பகுதியில் கஞ்சா விற்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த தாலுகா இண்ஸ்பெக்டர் சையது பாபு தனது குழுவுடன் கோதையம்மாள் வீட்டிற்கு விரைகிறார். அப்போது அங்கு நடத்தப்பட்ட சோதனையில், ஒரு கிலோவுக்கு மேல் கஞ்சா விற்பதற்காக வைத்திருந்தது கிடைத்துள்ளது.
இதனையடுத்து கோதையம்மாளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “பழனி டவுனில் இருக்கும் என் மகள் அன்னலட்சமிதான் என்னிடம் விற்பதற்காக தருகிறார். அவர் கொடுத்ததைதான் நான் விற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு இண்ஸ்பெக்டர் சையது பாபு தெரிவிக்கையில், அன்னலட்சுமியின் வீட்டிற்கு விரைகிறார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார். அதன்பின் கோதையம்மாள், அன்னலட்சுமி இருவரையும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டு, இரவோடு இரவாக மதுரையிலுள்ள பெண்களுக்கான தனிச்சிறையில் அடைக்கப்பட்டனர்.