Skip to main content

டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரத்துக்கு தடை: உயர்நீதிமன்றம்

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
M_Id_420367_TVS


டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த டிவிஎஸ் குழுமத்தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில், டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்