தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 103 நாட்களை கடந்து இறுதி கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கடந்த இரண்டு சீசன்களை போலவே தற்போது நடைபெற்று வரும் சீசன் 3 நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. அதே போல் கடந்த இரண்டு சீசனை விட தற்போது பங்கேற்கும் போட்டியாளர்கள் மீது சர்ச்சைகள் அதிகம் எழுந்துள்ளது. மேலும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் போட்டியிலிருந்து வெளியேறியது நிகழ்ச்சி பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், பாலிமர் என பல முன்னணி சேனல்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. சின்னத்திரை சேனல்களில் மக்களை கவரும் நிகழ்ச்சிகளை வைத்து தனது TRP ரேட்டிங்கை உயர்த்தவே அனைத்து சேனல்களும் போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு சீசன்களை விட சீசன் 3 மக்களிடையே குறைந்தளவு வரவேற்பை பெற்று TRP ரேட்டிங் குறைந்துள்ளது அந்த டிவி சேனலை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதுவும் கமல் வரும் வார இறுதி நாளான சனி, ஞாயிறு தினத்தில் மிகவும் குறைவான TRP ரேட்டிங்கை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் விஜய் டிவி சேனல் இரண்டாம் இடத்தை தான் பெற்றுள்ளது. முதலிடத்தில் சன் டிவி இருப்பதாக சொல்கின்றனர். மேலும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டம் என்பதால் TRP ரேட்டிங் உயரும் என்ற நம்பிக்கையில் விஜய் டிவி இருப்பதாக சொல்லப்படுகிறது.