
தேனியில் நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விழுந்த சம்பவத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பங்களா மேட்டில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி ஜவுளிக்கடை அருகே நேற்று ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அந்த நேரத்தில் எதிரே வந்து கொண்டிருந்த லாரி ஆட்டோ மீது பலமாக மோதி விபத்தானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கண்ணன், மணிகண்டன், பழனிசாமி, கணேசன், சதீஷ், நாகராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட கண்ணன், மணிகண்டன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.