விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ட்ரவுசர் திருடர்கள் எனும் திருட்டு கும்பல் போலீசாரிடம் சிக்கி உள்ளனது.
கொள்ளை சம்பவத்தின் போது பிடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு திருடும் வழக்கத்தை கொண்டவர்கள் இந்த டவுசர் திருடர்கள்.
உடலில் எண்ணையை தேய்த்துக் கொண்டு திருடுவதற்காக களத்தில் இறங்குவது தான் டிரவுசர் திருடர்களின் வழக்கம். அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் டவுசர் திருடர்கள் என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு பிரபலமானவர்கள் இந்த வகை திருடர்கள்.
திருட்டு சம்பவங்களின் பொழுது பொதுமக்கள் பிடியில் சிக்கி விட்டால் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொள்வது இந்த வகை திருடர்களின் வழக்கம். அதேபோல் பொதுமக்கள் துரத்தும் பொழுது வேகமாக ஓடுவதற்கு ஏதுவாக இவர்கள் பிரவுசர்கள் மட்டுமே அணிந்திருப்பார்கள் இதனாலேயே இவர்களுக்கு டவுசர் திருடர்கள் என்ற பெயர் உருவானது. ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் துணிகரமாக வீடு புகுந்து திருடும் இந்த திருடர்கள் பெண்களிடம் நகை பறித்த அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபடுதல் ஆகிய கொடூரங்களையும் அரங்கேற்றி வந்தனர். ஸ்க்ரூட்ரைவர் கம்பி கொண்டு கதவை உடைத்து திருடுவதில் வல்லவர்கள்.
இந்த திருடர்கள் காலையில் ஸ்டவ் ரிப்பேர், காய்கறி விற்பது இப்படி ஏதாவது ஒரு வேடங்களில் நோட்டமிட்டு இரவில் உருமாற்றி கொண்டு உடல் முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு களத்தில் திருட இறங்குவர். திருடச் செல்லும் பொழுது வாகனங்கள் எதையும் இவர்கள் எடுத்துச் செல்ல மாட்டார்கள் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு தப்பிச் சென்றுவிடுவார். அவர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் ஏராளம் ஏராளம் எந்த தடையமும் இல்லாத காரணத்தால் ட்ரவுசர் கொள்ளையர்களை பிடிப்பது என்பது போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ட்ரவுசர் கொள்ளையர்கள் சிக்கிக் கொண்டனர். திண்டிவனத்தில் கடந்த 24ம் தேதி மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட மூன்று பேர் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை உரிமையாளர் தடுத்த பொழுது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் அந்த ட்ரவுசர் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.
டவுசர் கொள்ளையர்களான அருணாச்சலம், பாண்டியன், வேடியப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி யைச் சேர்ந்த அருணாச்சலம் சோழ பாண்டிய புரத்தைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் வேடியப்பன் இந்த மூவரும்தான் டிரவுசர் கொள்ளையர்கள் என்பதை போலீசார் உறுதி செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை கர்நாடகத்திற்கு கொண்டு சென்று நகை வியாபாரிகளிடம் கொடுத்து உருக்கி தங்கக்கட்டிகளாக விற்றுவிடுவதாக அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சொந்த ஊரில் பன்றிகள் மேய்த்துக்கொண்டு குடிசை வீட்டில் இருக்கும் இந்த கொள்ளையர்களுக்கு கர்நாடகாவில் சொகுசு வீடுகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து இரண்டு தங்கச்சங்கிலி, 28 சவரன் உருக்கிய தங்க கட்டிகள் ஆறு கொலுசுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.