/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/450_1.jpg)
கஜா புயலை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு துறை சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி வழங்கினார்.பின்னர் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, கடலூர் துறைமுகப் பகுதிகளில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப்சிங் பேடி, "கடலூர் மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். செல்போன்கள் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள்பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கான இடங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கடலூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பூவராகவன், மீன்வளத்துறை இணை இயக்குநர் ரேணுகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் அதிகாரிகள் குழு முன்னெச்சரிக்கை ஆய்வு மேற்கொண்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)