Skip to main content

கூட்டுறவு சங்க நிதியில் கடன் வழங்கியதில் 4 கோடி மோசடி செய்த பெண் செயலாளர் சஸ்பெண்ட் !

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

கூட்டுறவு சங்க தேர்தலில் பெரும்பாலும் ஆளும்கட்சியான அ.தி.மு.க. பிரமுகர்களே போட்டியின்றி, அதிகாரிகள் துணையோடு வெற்றிபெற்று தமிழ்நாடு முழுவதும் பொறுப்பில் இருக்கிறார்கள். அதிகாரிகள் துணையோடு வெற்றிபெற்றதால் தட்டிக்கேட்டக எதிர்பொறுப்பிலும் யாரும் இல்லாததால் அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணையோடு பல கோடிகளை ஒவ்வொரு சங்கத்திலும் மோசடி செய்து வருகிறார்கள் என்பதற்கு திருச்சியை அடுத்த லால்குடி காட்டூர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற கடன் மோசடியே முன்உதாரணம். 

 

 

tt

 

 

திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே உள்ள காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் ராமநாதபுரம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களை சேர்ந்த 3,900 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

இந்த கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இந்த கடன் வங்கியின் முன்னாள் தலைவராக அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள சாலைசுந்தரம் பதவி வகித்துவந்தார். தற்போது இந்த காட்டூர் வேளாண்மை கடன் சங்கத்தின் தலைவராக சோபனா என்பவர் இருக்கிறார். அங்கே உர விற்பனை விற்பனையாளராக இருந்த ரேவதி தற்போது சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். 

 

இந்நிலையில், காட்டூர் மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பெயர்களில், தலா ரூ. 98,863 என்ற வீதம் கடன் பெற்றதாக சமீபத்தில் தெரியவந்தது. 2014-ம் ஆண்டு 100 விவசாயிகளின் பெயரில் 4 கோடி ரூபாய் வரை போலியாக பணம் எடுத்திருப்பதாக தகவல் வெளியானது. 

 

இதனால் அதிர்ச்சி அடைந்து இதை விசாரணை செய்ய வேண்டும் என வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் அந்த கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். ஆனால், எந்த பலனும் கிடைக்காததால் கடந்த 17-ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு ராஜா, ராணி வேடம் போட்டுகொண்டுவந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ‘எங்கள் பெயரில் பணத்தை எடுத்து ஏமாற்றிவிட்டு, நாங்கள் லோன் கேட்டு சென்றால் எங்களை விரட்டுகிறார்கள்’ என்று கோஷம் போட்டு முற்றுகையிட்டனர். 

 

tt

 

 

இந்த போராட்டத்தில் சாலைசுந்தரம், அந்த பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ புருஷோத்தமன் மற்றும் அவரது அண்ணன் பரமசிவம் ஆகியோர் பெயரிலும் கடன் பெற்று ஏமாற்றியிருப்பதாக புகார் கொடுக்க வந்திருந்தார். 

 

மனுவை வாங்கிக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், டி.ஆர்.ஓ, கூட்டுறவு சங்க துணை பதிவாளர், வேளாண்மைதுறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் விசாரணை கமிட்டி அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் முதல்கட்டமாக மோசடி நடந்திருக்கிறது என்று முதல் அறிக்கையை சமர்ப்பித்தனர். 

 

இதன் அடிப்படையில் காட்டூர் கூட்டுறவு சங்க செயலாளர் ரேவதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் முறைகேடு நடந்தகாலத்தில் பணியில் இருந்த நிர்வாக குழு மீது லால்குடி டி.எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பெயரில் தலைவர் சாலைசுந்தரம், துணை தலைவர் வாசன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பூபதி, ஹரிணி, கவுரிபிச்சை, ராஜேந்திரன், இந்திரா ஆகியோர் மீது லால்குடி காவல்நிலையத்தில் புகார் செய்திருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்