
சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரையை நோக்கி திங்கள்கிழமை இரவு பறக்கும் ரயில் சென்றது. இதில் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். அந்த பெண் பயணம் செய்த அதே பெட்டியில், வேளச்சேரியைச் சேர்ந்த 25 வயதான சத்தியராஜ் சென்றுள்ளார்.
அப்போது ஓடும் ரயிலில் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை அந்த பெண் எதிர்த்ததால், அந்த பெண்ணை கம்பியில் இடித்து தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ரயில்வே போலீஸ்காரர் சிவாஜி என்பவர் அந்த பெட்டிக்கு சென்று சத்தியராஜை மடக்கி பிடித்துள்ளார். தப்பிக்க முயற்சி செய்த அவரை, சாமார்த்தியமாக பிடித்து கைது செய்து எழும்பூர் காவல்நிலையத்தில் அடைத்தார். ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உள்ளார். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் சென்னை ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.டி. துறையை சேர்ந்த பெண் பணியாளர்கள்தான் அதிகம் பயணிக்கும் சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை என்றும், இந்த வழிதடத்தில் அடிக்கடி செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது என்று கூறும் பயணிகள், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.