





Published on 06/07/2020 | Edited on 06/07/2020
சென்னையில் கடந்த 12 நாட்களாக அமலில் இருந்த முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் தமிழக அரசு, தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. அதேபோல், கால் டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் வாகனங்களில் வெளியில் வருவது அதிகரித்திருப்பதுடன் பல இடங்களில் வாகன நெரிசலும் காணப்படுகிறது.
சென்னை, பேசின் பிரிட்ஜ் சாலையில் காலை நேரத்திலேயே பெரும்பாலான மக்கள் அலுவலகங்களுக்குச் செல்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.