Published on 27/12/2021 | Edited on 27/12/2021
![Tourists flock to Mudumalai for a series of holidays!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Uv4N-fFA9sqXp-lMiVO26zNry0Ja4fhRfrdE1toJL8c/1640577137/sites/default/files/inline-images/ele333_0.jpg)
தொடர் விடுமுறை காரணமாக, நீலகிரி மாவட்ட முதுமலைக்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான காலநிலை உள்ளதால், கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி, ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, முதுமலையில் உள்ள யானைகள் முகாம் மற்றும் வனப்பகுதிக்குள் வாகன சவாரி செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா வருவதால் கூடலூர் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.