'டார்ச் லைட்' சின்னம் வேண்டாம் என அந்த சின்னத்தைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
'எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் ரோஜாப்பூ, தொப்பி, ரிக்ஷா சின்னத்துடன் இறுதியாக 'டார்ச் லைட்' கேட்டிருந்தேன். கடந்த தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தங்களுக்கு வேண்டாம்.'டார்ச் லைட்' சின்னம் வேண்டாம்; மாற்றுச் சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் சின்னங்களைத் தராமல் 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கியது ஏற்புடையதல்ல. எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் வகையில் புதிய சின்னம் ஒதுக்குமாறு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன்' என எம்.ஜி.ஆர். மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். கட்சி சின்னம் வேண்டாம் என அறிவித்துள்ளதால், 'டார்ச் லைட்' சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சித் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.