தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், நேற்று (03/05/2021) வரை நீடித்தது.
அதைத் தொடர்ந்து, அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான முடிவுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. அதேபோல், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்துள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.
எந்தெந்த கட்சிகள், எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பதைப் பார்ப்போம்!
அதிமுக - 66
திமுக - 133
காங்கிரஸ் - 18
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 4
பாமக - 5
பாஜக - 4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2
எந்தெந்த கட்சிகள் எத்தனை சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன? என்பது குறித்து பார்ப்போம்!
அதிமுக - 33.29%
திமுக - 37.7%
காங்கிரஸ் - 4.27%
பாமக - 3.80%
பாஜக - 2.62%
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1.09%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 0.85%
பகுஜன் சமாஜ் கட்சி - 0.22%
தேமுதிக - 0.43%
ஏஐஎம்ஐஎம் - 0.01%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 0.48%
நோட்டா - 0.75%
மற்றவை - 14.46%