தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று (06/04/2021) நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 07.00 மணியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 71.79% வாக்குப் பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12.00 மணி அல்லது 01.00 மணிக்கு அதிகாரப்பூர்வ வாக்கு சதவீத விவரம் தெரியவரும். வாக்கு சதவீதம் நன்றாக இருந்தாலும் நள்ளிரவு மாற வாய்ப்புள்ளது. தேர்தல் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். வேளச்சேரியில் இருந்து வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக எந்த நிகழ்வும் நடக்கவில்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40% வாக்குகள் பதிவாகியுள்ளன" எனத் தெரிவித்தார்.
மாவட்ட வாரியாகப் பதிவாகியுள்ள வாக்கு சதவீத விவரங்களைப் பார்ப்போம்!
திருவள்ளூர்- 68.73%, காஞ்சிபுரம்- 69.47%, வேலூர்- 72.31%, கிருஷ்ணகிரி- 74.23%, தர்மபுரி- 77.23%, திருவண்ணாமலை- 75.63%, விழுப்புரம்- 75.51%, சேலம்- 75.33%, நாமக்கல்- 77.91%, ஈரோடு- 72.82%, நீலகிரி- 69.24%, கோயம்புத்தூர்- 66.98%, திண்டுக்கல்- 74.04%, கரூர்- 77.60%, திருச்சி- 71.38%, பெரம்பலூர்- 77.08%, கடலூர்- 73.67%, நாகப்பட்டினம்- 69.62%, திருவாரூர்- 74.90%, தஞ்சாவூர்- 72.17%, புதுக்கோட்டை- 74.47%, சிவகங்கை- 68.49%, மதுரை- 68.14%, தேனி- 70.47%, விருதுநகர்- 72.52%, ராமநாதபுரம்- 67.16%, தூத்துக்குடி- 70.00, திருநெல்வேலி- 65.16%, கன்னியாகுமரி- 68.41%, அரியலூர்- 77.88%, திருப்பூர்- 67.48%, தென்காசி- 70.95%, செங்கல்பட்டு- 62.77%, திருப்பத்தூர்- 74.66%, ராணிப்பேட்டை- 74.36% வாக்குகள் பதிவாகியுள்ளது.
2011 சட்டமன்றத் தேர்தலில் 78.01%, 2016 சட்டமன்றத் தேர்தலில் 74.24% வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.