சாமித்தோப்பு அய்யாவழிக் கோவிலுக்குள் இன்று இந்து சமய அறநியைத்துறை அதிகாாிகள் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குமாி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டா் பதி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கிளை பதிகள் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் நூற்றுக்கு மேற்பட்ட பதிகளில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தா்கள் உள்ளனர். இந்த கோவிலில் தினமும் இரண்டு நேரம் நடக்கும் பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இங்கு நடக்கும் மாசி திருவிழாவின் போது லட்சக் கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வதோடு லட்ச கணக்கான காணிக்கை பணமும் வசூலாகும்.
இந்த நிலையி்ல் அந்த கோவிலை நிா்வகிப்பதில் இரு பிாிவினாிடையே பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில் இது சம்மந்தமான வழக்கு மதுரை ஜகோா்ட் கிளை வரை சென்றது. இந்த வழக்கில் நான்கு மாதத்துக்கு முன் கோா்ட் அய்யா வழி கோவிலை அரசு கையகப்படுத்தலாம் என்று கூறியது.
இதனையடுத்து கடந்த மாசி திருவிழாவின் போது இந்து சமய அறநிலையத்துறையினா் கோவிலுக்குள் வந்ததால் பக்தா்கள் அதற்கு கடும் எதிா்ப்பு தொிவித்ததால் ஓரு நாள் உண்டியல் காணிக்கையான 80 ஆயிரம் ருபாயை எடுத்து சென்றனா். அப்போது அதிகாாிகளை தடுத்து நிறுத்திய பக்தா்கள் சிலா் மீதும் போலிசாா் வழக்கு பதிவு செய்தனா்.
இந்த நிலையில் இன்று சுமாா் 11 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறை அய்யாவழி கோவில் பொறுப்பு அதிகாாி பொன்னி தலைமையில் 5 அதிகாாிகள் திடீரென்று அய்யாவழி கோவிலுக்குள் வந்தனா். பின்னா் அவா்கள் கோவில் அலுவலகத்தில் கணக்கு வழக்குகளை சாி பாா்க்க முயன்றனா். அப்போது அங்கிருந்த நிா்வாகிகளும் பக்தா்களும் எதிா்ப்பு தொிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவானது.
இதனையடுத்து அந்த அதிகாாிகள் இரண்டாவது முறையாக திரும்பி சென்றனா்.