கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கான நோ்காணல் நேற்று தொடங்கியது. இதில், ஏராளமான பொறியியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், கலை, அறிவியல் பிரிவைச் சேர்ந்த பட்டதாரிகள் என 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.
கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவுத் தொழிலாளா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான நோ்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பதாரா்களுக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, விண்ணப்பதாரா்களுக்கான நோ்காணல் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. இப்பணிக்கு, 21 முதல் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படைத் தகுதிகள் குறித்து விண்ணப்பதாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தோ்வு செய்யப்படும் பணியாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.15,700 முதல் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படும் மாநகராட்சி அறிவித்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று நோ்காணலில் 2 ஆயிரம் விண்ணப்பதாரா்கள் கலந்து கொண்டனா். இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள், பொறியியல், டிப்ளமோ படித்தவா்கள் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனா். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் நேர்காணலில் கலந்துகொண்டனர்.
நேர்காணல் முடித்த பின் செய்தியாளரிடம் பேசிய பட்டயபடிப்பு முடித்த பட்டதாரி மாணவிகள்;-
படித்ததற்கான வேலைகள் கிடைக்கவில்லை என்பதால் கிடைக்கும் வேலையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்தார்.இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் வந்திருந்தனர். துப்புரவு பணிக்கான கல்வி தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேர்காணலுக்கு வந்தவர்களில் 50 சதவீததிற்கும் மேற்பட்டோர் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தனர். மேலும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகள், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், பொறியில் படிப்பு முடித்தவர்கள் என ஏராளமானவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். துப்புரவு பணி வேலை ஒன்றும் இழிவானதல்ல எனவும் குடும்ப சூழ்நிலை காரணமாக எந்த வேலை கிடைத்தாலும் போதும் என்ற நிலை இருப்பதாகவும், தற்போது யாருக்கும் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதில்லை என தெரிவிக்கும் பட்டதாரி பெண்கள், தற்போது ஜெராக்ஸ் கடையில் 8000 சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் நிலையில் துப்புரவு பணியாளர் வேலை கிடைத்தால் இன்னும் அதிகம் ஊதியம் கிடைக்கும் என்பதால் இந்த பணிக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பாதுகாப்பிற்காக மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.துப்புரவு பணியாளர்களுக்கான நேர்காணல் நாளை வரை நடைபெறுகின்றது. துப்புரவு பணியாளர் பணி இழிவானதல்ல என்ற எண்ணம் இளைய சமுதாயத்திடம் ஏற்பட்டுள்ளதே இந்த பணிக்கு பட்டதாரிகள் அதிகம் விண்ணப்பித்துள்ளதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.