Skip to main content

ரூபாய் 20 ஆயிரத்துக்கு விற்கபட்ட இரு சிறுமிகள்... இடைத்தரகர்கள் கைது!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

கோயம்புத்தூரில் இயங்கி வரும் பின்னலாடை நிறுவனத்திற்கு சிறுமிகளை வேலைக்காக இருபது ஆயிறம் ரூபாய் பணத்திற்கு  விற்ற சிறுமிகளின் பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து திருவாரூர் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகளான கவிதா(13) மற்றும் சங்கீதா(14) ஆகியோரை அவரது பாட்டி விஜயலட்சுமி குடும்ப வறுமை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இயங்கி வரும் மகாமேரூர் ஸ்பின்னிங் மில் என்ற பின்னலாடை
நிறுவனத்திற்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சகுந்தலா, கனகம் ஆகிய இடைத்தரகர்கள் மூலமாக வேலைக்காக அனுப்பியுள்ளனர். அதற்கு முன்பணமாக ரூபாய் 20,000 பெற்றுக்கொண்டு இரண்டு சிறுமிகளை வேலைக்கு அனுப்பி உள்ளனர். 

THIRUVARUR DISTRICT KUDAVASAL WOMEN CHILDRENS WORK WITH COIMBATORE COMPANY

இந்த தகவல் வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பனுக்கு தெரியவர, அவர் குடவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பாட்டி விஜயலட்சுமி, இடைத்தரகர்கள் சகுந்தலா மற்றும் கனகம் ஆகிய 3 பேர் மீது
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து தீவிர மேற்கொண்டுள்ளனர்.


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "ஒருகாலத்தில் கிராமங்களில் வேலைக்கு பஞ்சமிருக்காது. முப்போகம் விளைந்த நிலங்கள் முழுவதும் ஒரு போகத்திற்கே வழியில்லாமல் போனதன் விளைவு வேலையில்லாமல் வயிற்று பிழைப்புக்காக திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லும் அவலம் நிலைதான், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து வருகிறது. அதிலும் கிராமப்புறங்களில் இளம்பெண்கள், குழந்தைகளை பின்னலாடை நிறுவனத்திற்கு கார்த்திகை, மார்கழி, மாதம் வந்துவிட்டாலே, அந்த மாதத்தில் உண்டாகும் கொடுமையான வறுமையை பயன்படுத்தி குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலைக்கான குழந்தைகளை தரகர்கள் மூலம் கொண்டு செல்வார்கள், இது குறித்து திருவாரூர் மாவட்டத்தில் பல முறை புகார் அளித்தும் பயனில்லை, இப்போதாவது ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்கின்றனர். 

 

CAB




 

சார்ந்த செய்திகள்