Skip to main content

தேர்வு செய்யப்படாத சேர்மன், வைஸ்சேர்மன் பதவிகளுக்கு மார்ச் 4 மறைமுக தேர்தல்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

நடந்து முடிந்த முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர்களாக வெற்றி பெற்று பதவியேற்றனர். பல ஒன்றியங்களில் சேர்மன் மற்றும் துணை சேர்மன்களுக்கான மறைமுக தேர்தலை ஆளும்கட்சியான அதிமுகவின் அரஜகத்தால் நடத்த முடியவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடார்பான வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

 

Thiruvannamalai - local body election

 



நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடுமையான கேள்விகளை எழுப்பி உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை மீண்டும் நடத்த தேதி அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். அதன்படி வரும் மார்ச் 4ந்தேதி தேர்வு செய்யப்படாத மாவட்ட, ஒன்றிய சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கவுன்சிலர்களுக்கு பிப்ரவரி 25ந்தேதியே வழங்க வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஆகிய இரண்டு ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டராம்பட்டில் திமுக மெஜாரிட்டியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், திமுக சார்பில் முன்னிறுத்தப்படும் சேர்மன் வேட்பாளர் சாதி சான்றிதழ் சர்ச்சைக்குரியது என்பதால் நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி மாவட்ட தேர்தல் அலுவலகராகவுள்ள கந்தசாமி நிறுத்திவைத்துள்ளார்.

அதேபோல் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் திமுக தனி மெஜாரிட்டியான கவுன்சிலர்களை பெற்றுள்ளது. அதிமுகவில் 3 கவுன்சிலர்களும் 7 கூட்டணி கட்சி மற்றும் சுயேட்சை கட்சி கவுன்சிலர்களோடு சேர்மன், துணை சேர்மன் பதவியை பிடிக்க முயல்கிறது. தேர்தல் நடந்தால் தாங்கள் தோல்வியை சந்திப்போம் என்பதால் தேர்தலை நடத்தவிடாமல் செய்கிறது அதிமுக என குற்றம்சாட்டுகிறார்கள் திமுக கவுன்சிலர்கள்.

வரும் மார்ச் 4 ந்தேதி நடைபெறும் மறைமுக தேர்தலில் இந்த இரண்டு ஒன்றியத்தில் பெரும் மோதல் இருக்கும் என்பதால் இப்போதே பாதுகாப்பு பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்துகிறார்கள் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்