Skip to main content

“இடைக்கால உத்தரவு ஏதும் இல்லை...” - ஓ.பி.எஸ்க்கு ஷாக் கொடுத்த சென்னை உயர் நீதிமன்றம் 

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

"There is no interim order.." - Madras High Court gave a shock to OPS

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த நிலையில், பல்வேறு அரசியல் திருப்பங்களுடன் இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற்று, அதில் இ.பி.எஸ். மட்டுமே மனுத் தாக்கல் செய்ய, எதிர் தரப்பான ஓ.பி.எஸ். அணி அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஓ.பி.எஸ். தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்தார். தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே பதவியேற்று ஓ.பி.எஸ்.சின் அடுத்த நகர்வுக்கு நெருக்கடி ஏற்படுத்தி இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

அதேசமயம், ஓ.பி.எஸ். தரப்பு தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது. பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இ.பி.எஸ். அதிமுக சட்ட விதி திருத்தங்களை அங்கீகரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்தார். அதேசமயம் ஓ.பி.எஸ்., பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு மனு செய்தார். 

 

"There is no interim order.." - Madras High Court gave a shock to OPS

 

அந்த மனுவில், ‘நீதிமன்றங்களில் அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இ.பி.எஸ்.சின் முறையீட்டை ஏற்று பொதுச் செயலாளர் பதவியை அங்கீகரிக்கக்கூடாது’ என்று தெரிவித்திருந்தார்.  

 

இ.பி.எஸ். மேல்முறையீட்டை முடித்து வைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

 

இந்நிலையில் அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ். தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டது. 

 

"There is no interim order.." - Madras High Court gave a shock to OPS

 

அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மேல் முறையீட்டு மனு மீது தற்போதைக்கு எந்த இடைக்கால உத்தரவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தேவைப்பட்டால் 24 ஆம் தேதி விசாரிப்பதாகவும் இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்