Published on 26/03/2019 | Edited on 26/03/2019
தஞ்சை மக்களவை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் தமாகா போட்டியிட அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சைக்கிள் சின்னத்தை தமாகாவிற்கு நிரந்தமாக ஒதுக்ககோரிய வழக்கில் இன்று நடந்த விசாரணையில் மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட இருக்கிற நிலையில் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தமாகவின் இடைக்கால கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம். தஞ்சையில் தமாகாவிற்கு சைக்கிள் சின்னம் இல்லை என உத்தரவிட்டது.