அதிமுகவினர் வாக்குசாவடிகளை கைப்பற்ற இருப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ.வும். திமுக மாவட்ட பொறுப்பாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேனி பாராளுமன்றத் தேர்தல் மறறும் ஆண்டிபட்டி.,பெரியகுளம் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியபோது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து துணை முதல்வர் தனது பணபலம், அதிகார பலம், ஆள் பலத்தை வைத்து தனது மகனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேஷ்டி, சேலை _ பரிசுப் பொருட்களை வழங்கியது. வாக்களர்களுக்கு ரூ 1000/2000 வழங்கியதின் மூலம் ஜனநாயகத்தை கேள்விக்குறி ஆக்கி உள்ளார்.
திமுகவின் வெற்றி உறுதியானது என்று தெரிந்தவுடன், தற்போது தேர்தல் நடைபெறும் போது மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்குசாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலையாகும். இது குறித்து எஸ்.பி. மற்றும் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம் என்று கூறினார். பேட்டியின் போது நகர ஒன்றிய மற்றும் கூட்டணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்
.