Skip to main content

பட்டாசு விபத்து விழிப்புணர்வுக் கூட்டத்தை இப்படியா நடத்துவது? -அரசுக்கு எதிரான குமுறல்!

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
kk

 

அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு, கொத்துக்கொத்தாக உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை இன்று சிவகாசியில் நடத்தினார்கள் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையினர்.   

 

சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ‘மைக்’ பிடித்த தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஆசைத்தம்பி, “இதுபோன்ற கூட்டங்களை அவசரகதியில் நடத்தக்கூடாது.  விழிப்புணர்வு பெற வேண்டிய அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்றால்,    மூன்று நாட்களாவது அவகாசம் வேண்டும். பட்டாசுத் தொழில் பாதுகாப்பு வாரியம் என்பது எங்களது நீண்டநாள் கோரிக்கை. அதை, இந்த அரசாங்கம் நிறைவேற்றித் தர வேண்டும்.” என்றார்.  

 

vk

 

பட்டாசுத் தொழிலை விபத்தில்லாமல் நடத்துவதற்கான வழிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர். 

 

இதுபோன்ற கூட்டங்களை சம்பிரதாயமாக நடத்துவதால் ஒரு பலனும் இல்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திவரும்  பட்டாசுத் தொழில் என்பதால்,  பெருமளவில் தொழிலாளர்களை கலந்துகொள்ள வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரயில் தடம் புரண்டு விபத்து; மீண்டும் பரபரப்பு

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Train derailment accident; The excitement again

உத்தரபிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சண்டிகர் - திப்ரூகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் நான்கு ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகாத நிலையில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அண்மையில் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  மீண்டும் ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மோதி விட்டு நிற்காமல் பறந்த கார்; பஞ்சராகி பாதி வழியில் நின்றபோது பறிமுதல்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
A car that caused an accident and did not stop

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள சருக்கலக்கோட்டை மற்றும் குருந்திரகோட்டை கிராமங்களைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரு பைக்கில் கீரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பனங்குளம் தெற்கு கிராமத்தில் அருகே திருவாரூர் மாவட்டம் முன்னாவல்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தனபாண்டி (வயது 24) அறந்தாங்கி நோக்கி ஓட்டிச் சென்ற கார் எதிரே வந்த சிறுவர்களின் பைக் மீது மோதிய விபத்தில் 3 சிறுவர்களும் படுகாயமடைந்தனர்.

ஆனால் விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று விட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் ரத்த காயங்களுடன் கிடந்த 3 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவர்களின் பைக் மீது மோதி நிற்காமல் தப்பிச் சென்ற கார் ஒரு கி.மீ தூரத்தில் குளமங்கலம் தெற்கு பகுதியில் பஞ்சராகி நின்றுவிட்டது. தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீசார் பஞ்சராகி நின்ற காருக்கு மாற்று டயர் மாற்றி காரை கைப்பற்றி கீரமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.