தேனி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் எதுவும் இல்லை என டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், தேனி மாவட்ட சரக டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, திண்டுக்கல் மாவட்டத்தில் 2018-ல் ரவுடிகள், குற்றவாளிகள் என 105 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் 1,272 விபத்துகளில் 413 பேர் இறந்துள்ளனர். தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் ஆய்வு செய்து 115 இடங்களில் இதை தடுக்க 437 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ல் 373 திருட்டு வழக்கு 34 வழிப்பறி கொள்ளை சம்பவம் உள்பட 16 ஆயிரத்து 174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக திருட்டு கொள்ளை தொடர்பாக கைதான அவர்களிடமிருந்து ஒரு கோடியே 73 லட்சத்து 69 ஆயிரத்து 660 ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் 12 ஆயிரத்து 458 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2008-ல் கொடைக்கானலில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட நக்சலைட்டுகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2008-க்கு பின் திண்டுக்கல். தேனி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் எதுவும் இல்லை சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 ஆயிரத்து 870 பேர் கைது செய்யப்பட்டனர், அதில் 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போக்சோ சட்டத்தில் 52 பேர் கைதாகியும் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.