Skip to main content

தாமிரபரணியிலிருந்து வவுனியா காடுகளுக்கு இரைதேட பறக்கும் வௌவால்கள்..!

Published on 06/08/2018 | Edited on 06/08/2018
th


       முந்தைய நாள் மாலை வேளையில், தங்களுக்கான இரையைத் தேட ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையிலிருந்து புறப்படும் பழந்தின்னி வௌவால்கள் இலங்கையிலுள்ள வவுனியாக் காடுகளில் சுகித்து விட்டு மறு நாள் அதிகாலையிலேயே புறப்பட்ட இடத்திலேயே ஐக்கியமாகி விடுகின்றன.

 

th

   

 நெல்லையிலிருந்து திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணிக்கரை  யோரமுள்ள ஸ்ரீவைகுண்டம் ஆற்றங்கரையில் அரச மரம், மருதமரம் மற்றும் புன்னை மரங்கள் ஏராளமாய் வளர்ந்து கரையை பலப்படுத்தி வருகின்றன. இந்த மரங்களில் கடந்த நூறு வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வௌவால்கள் மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. பகல் முழுவதும் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் அரிய வகை உயிரினமான இந்த வௌவால்கள் பாலூட்டி இனத்தின் பறக்கும் ஒரே விலங்கு இது தான். இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறியும் திறன் கொண்ட வௌவால்களை வேட்டையாடவும், உயிருடன் பிடிப்பதற்கும் பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளது வனத்துறை. மரங்களை முழுவதும் மறைத்து பழங்கள் போல் தொங்கும் இந்த வௌவால்கள் மாலை மங்கும் வேளையில் இங்கிருந்து பறந்து இலங்கையிலுள்ள வவுனியாக் காடுகளுக்கு சென்று இரை தேடி விட்டு, மறு நாள் அதிகாலையிலேயே வந்து விடுவதனை ஆச்சர்யமாக பார்க்கின்றனர் சுற்றுலாவாசிகளும் ஆராய்ச்சியாளர்களும்.
 

சார்ந்த செய்திகள்