Published on 07/05/2020 | Edited on 07/05/2020

கரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் முதல் நாளில் அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் கூட்டம் அதிகமாக இருந்தது. பல்வேறு இடங்களில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றால் அருகருகே இடித்துக்கொண்டு வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது வாங்க குவிந்த மது பிரியர்கள், சமூக இடைவெளியை பின் பற்றி இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நின்றிருந்தனர். கடும் வெயிலிலும் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.