Skip to main content

தஞ்சை தேர் விபத்து: விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? யார்? 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Tanjore Chariot Accident: Who died in the accident? Who?

 

தஞ்சையில் தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் தந்தை, மகன் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 

 

தேரோட்டத்தின் போது தேரில் அர்ச்சகர் ஆ.தா.செல்வம் (வயது 56), அவரது மகன் அருண்குமார், நண்பர் விஜய் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதேபோல், முன்னாள் ராணுவ வீரரான பிரபாத் (வயது 47) தேரில் அமர்ந்தப்படி, பூஜைக்கு வரும் தட்டுகளை வாங்கி அர்ச்சகரிடம் தரும் பணியைச் செய்து வந்திருக்கிறார். மின்சாரம் தாக்கியதில் தேரில் இருந்த ஆ.தா.செல்வம், பிரபாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

 

தேரை மின் விளக்குகளால் அலங்காரம் செய்த தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மகாதேவனின் 22 வயதான மோகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், விபத்தில் விவசாயிகளான அன்பழகன் (வயது 60) , அவரது மகன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்தனர். 

 

தேரின் இரும்பு வடத்தைப் பிடித்துச் சென்றவர்கள் மற்றும் உடனிருந்தவர்களில் நாகராஜ் (வயது 60), சாமிநாதன் (வயது 56), கோவிந்தராஜ் (வயது 50) ஆகியோரும் உயிரிழந்தனர். தேரோட்டத்தில் பல சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த நிலையில், விபத்தில் சந்தோஷ் (வயது 15), ராஜ்குமார் (வயது 14), பரணிதரன் (வயது 13) ஆகியோர் உயிரிழந்தது நெஞ்சைப் பிசைவதாக உள்ளது. 

 

இந்த விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 15 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்