Skip to main content

தமிழகத்தின் புதிய டிஜிபி பதவியேற்பு

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

taminadu new dgp taken charge

 

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக்கொண்டார்.

 

தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு இன்றுடன் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலை தமிழக டிஜிபியாக நியமிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இன்று காவல்துறை தலைமையகத்தில் தமிழக டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு, புதியதாகப் பதவியேற்கும் சங்கர் ஜிவாலிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

 

புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சேலம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல் மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மண்டல தலைவராகவும் இருந்துள்ளார். உளவுத்துறை ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப் படையின் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுக் காலமாகப் பணியாற்றி வந்தார். சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கத்தை 2007 ஆம் ஆண்டும், குடியரசுத் தலைவர் காவலர் பதக்கத்தை 2019 ஆம் ஆண்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்