Published on 07/12/2019 | Edited on 07/12/2019
தமிழநாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (GANGMAN) உடற்தகுதித் தேர்வுக்கான மாற்று தேதி அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேங்மேன் (GANGMAN) பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வுக்கான மாற்று தேதி, தேர்வர்களின் தொலைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குறிப்பிட்டுள்ளது.