Published on 20/12/2019 | Edited on 20/12/2019
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 27- ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 30- ஆம் தேதியும் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக மற்ற 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடக்கிறது.
![TAMILNADU LOCAL BODY ELECTION 2,31,890 Contest](http://image.nakkheeran.in/cdn/farfuture/OHA3flulnVBJSkcdqvy7Y3J0ejXHKesq1ZRKbrYgKUs/1576866379/sites/default/files/inline-images/C3_3.jpg)
இந்நிலையில் 27 மாவட்டங்களில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 27 மாவட்டங்களில் 18570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி போட்டியில் 1,70,898 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 2,31,890 பேர் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.