Skip to main content

காதலனை ஆள்வைத்து கடத்திய காதலி கைது... பின்னணியில் திடுக்

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

சென்னை திருவல்லிகேணியை சேந்தவர் வாசவி. டென்னிஸ் வீராங்கனையான இவர் அமெரிக்காவில் டென்னிஸ் பயிற்சி பெற்றுவருகிறார். அதேபோல் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.

 

 boyfriend kidnapped by lover...

 

வாசவியும் கீழ்பாக்கத்தை சேர்ந்த நவீத் அகமதுவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் வாசவியை பைக்கில் அழைத்துச் சென்ற நவீத் அவரை சேத்துப்பட்டு பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு சென்றபோது பைக்கில் சென்ற நவீத்தை அடையாளம் தெரியாத சில நபர்கள் கடத்தியதாக கூறப்படுகிறது.

 

அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்த நவீத் டிபி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை கடத்திய அந்த கும்பல் தன்னிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணமில்லை என்றவுடன் தனது ஐபோன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்து சென்றதாகவும் கூறியிருந்தார்.

 

 boyfriend kidnapped by lover...

 

இதுதொடர்பாக டிபி.சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பட்ட அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில் வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் சரவணன் என்ற இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

 

police

 

அந்த இரண்டு பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல் போலிசாருகே அதிர்ச்சியை தரும் வகையில் இருந்தது. அதாவது நவீத்தின் காதலியும், டென்னிஸ் வீராங்கனையுமான வாசவிதான் நவீத்தை கடத்த சொன்னார் என அந்த இரு இளைஞர்களும் கூற அதிர்ந்த போலீசார் டென்னீஸ் வீராங்கனை வாசவியை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.

 

police

 

இதுதொடர்பாக வாசவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வழக்கு முற்றிலும் திசை திரும்பியது, அதாவது சமீப காலமாக நவீத்க்கும்  எனக்கு இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தது இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. தாங்கள் நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட இருப்பதாக நவீத் மிரட்டல் விட்டார் என கூறியுள்ளார். காதல் விவகாரம் என்பதால் கண்டித்து அனுப்பிவிட வெளிநாடு தப்பி செல்லமுயன்ற வசாவியை போலீசார் கைது செய்தனர்.

 

police

 

 

police

 

அவர் மட்டுமின்றி இந்த கடத்தலில் ஈடுபட்ட சரவணன், பாஸ்கர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட பாஸ்கர் வடபழனி மகளிர் காவல்நிலைய தலைமை காவலரின் மகன் என்பதும், புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் சாலையில் இருந்த பேரி கார்டை பைக்கில் அமர்ந்தபடி நடு சாலையில் தீப்பொறி பறக்க இழுத்து சென்றவர் என்றும் தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்