Published on 01/02/2021 | Edited on 01/02/2021

தமிழக அரசின் 47 ஆவது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் ராஜீவ் ரஞ்சன் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று பணியைத் தொடங்கினார்.
1961- ஆம் ஆண்டு பிறந்த ராஜீவ் ரஞ்சன், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராஜீவ் ரஞ்சன் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல புலமை மிக்கவர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி கவுன்சில் சிறப்பு செயலாளராகப் பணியாற்றியுள்ளார். அதேபோல் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாதம் ஊதியமாக ரூபாய் 2,25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.