Published on 19/09/2020 | Edited on 19/09/2020
தமிழகத்தில் ரூபாய் 353.11 கோடியில் அமைக்கப்பட்ட 25 துணை மின் நிலையங்களைத் திறந்தார் முதல்வர் பழனிசாமி.
அதன்படி, சேலம், தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, திருவாரூர், வேலூர், ஈரோடு, சென்னை, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 25 துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும், பல மாவட்டங்களில் ரூபாய் 9.70 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடங்களையும் முதல்வர் காணொளியில் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.