தமிழக அமைச்சரவை கூட்டம், வரும் 19- ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், தொழில் துறைக்கான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் உள்ளாட்சி தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதேபோல் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்துள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை செய்கிறார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நாளை (18/11/2019) இரவு சென்னை திரும்புகிறார்.