2019 நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வருகிற நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்தப்படலாம் என்கிற அரிபுரியில் தமிழக காங்கிரஸ் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக தமிழக காங்கிரசின் தலைவர் திருவுநாவுக்கரசர் மாவட்டங்கள் தோறும் கட்சியின் செயல்வீரர்கள் நிர்வாகிகளின் கூட்டத்தை நடத்தி அவர்களைத் ஆயத்தப்படுத்துகிறார்.
அதன்படி திருநாவுக்கரசர் நெல்லையிலிருந்து தனது நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளார். ஒரே நாளில் நெல்லை கிழக்கு மாநகர், மற்றும் நெல்லை மேற்கு மாவட்டம் என வள்ளியூர், நெல்லை, தென்காசி மூன்று பகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டத்தினை நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் காங்கிரசில் உள்ள அனைத்து கோஷ்டிகளும், ஈகோ பார்க்காமல் கலந்து கொண்டது குறிப்பிடத்தத்தது.
அந்தக் கூட்டங்களில் பார்லிமெண்ட்டிற்கான தேர்தல், வரும் நவம்பர், டிசம்பர்களில் நடத்தப்படலாம். தமிழகத்தின் மொத்த வாக்குச் சாவடிகள் 64 ஆயிரம். வாக்குச்சாடி ஒன்றிற்கு ஐந்து பேர்கள் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அத்துடன் வார்டு கிளைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். இது அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனையின்படி செய்யப்படுகிறது அத்துடன் தேர்தலின் போது தமிழகப் பிரச்சாரத்திற்கு வரவிருக்கிற ராகுல் காந்தி தமிழ் நாட்டின் மாவட்டங்களிலுள்ள பல்வேறு பகுதிகளுக்குப் பிரச்சாரத்திற்காக வருவதாக ஒப்பு கொண்டுள்ளதையும் அழுத்தமாகவே சொன்னார் திருநாவுக்கரசர்.
ஒசையின்றி தேர்தல் வேலையைத் தொடங்கி விட்டது தமிழக காங்கிரஸ்.