Skip to main content

'தமிழ்நாட்டில் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவர்'- மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

nn

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

mm

 

பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ''திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவு திரையுலகுக்கு ஒரு பேரிழப்பாகும். மாரிமுத்துவின் பேச்சுக்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. தனது நடிப்புத் திறன் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராக புகழ்பெற்றார். சுமார் 50 படங்களில் நடித்து எதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மாரிமுத்து அவர்கள் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்'' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்