Published on 26/12/2019 | Edited on 26/12/2019
சுனாமி பேரழிவின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தென்கிழக்கு ஆசியாவின் கடலோர பகுதிகளில் சுனாமி பேரலை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. அதன் நினைவு தினமான இன்று பட்டினபாக்கம் கடற்கரையில் மீனவ அமைப்புகள், மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பில் கடலில் மலர்தூவியும் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தமிழக பாஜக சார்பில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் நடிகை கவுதமி கலந்துகொண்டு சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.